Archives: ஏப்ரல் 2016

தேவனுடைய பார்வையில் நேர்மையானதைச் செய்தல்

அநேக ஆங்கிலேய வீட்டுச் சொந்தக்காரர்கள் போலியான தரங்குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகட்டுபவர்களை, “கவ்பாய் பில்டர்ஸ்” என்ற பதத்தால் அழைப்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட பயம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அப்பெயரை அவர்களுக்கு வழங்கினர்.

ஏமாற்றும் தச்சர்கள், கொத்தனார்கள், கல்தச்சர்கள் போன்றோர் வேதாகம காலத்திலும் சந்தேகமின்றி வாழ்ந்திருப்பார்கள். யோவாஸ் அரசன், ஆலயத்தைப் பழுதுபார்த்து கட்டிய வரலாற்றில், அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பழுதுபார்க்கும் பணியைச் செய்தவர்களும், அவர்களைக் கண்காணித்தவர்களும் முற்றிலும் நேர்மையுடனும், உண்மையாகவும் செயல்பட்டார்கள் (2 இரா 12:15).

எனினும்…

கிறிஸ்துவின் சுகந்த வாசனை

நம்மில் உள்ள ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு மிகவும் கூர்மையான ஞாபகசக்தியை நமக்கு உணர்த்துகிறது? என்னைப் பொறுத்தவரையில் மோப்பம் என்னும் உணர்வுதான் என்று நான் நிச்சயமாகக் கூறமுடியும். ஒரு வகையான சூரிய எண்ணையின் மணம் என்னை உடனே பிரெஞ்சுக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுவிடும். “கோழிக்கறி கூட்டு” என் சிறு பிராயத்தில் பாட்டி வீட்டிற்குச் சென்றதை நினைவூட்டும். “பைன்” பற்றிய ஓர் வார்த்தை “கிறிஸ்மஸிற்கும்” முகச்சவரம் செய்தபின் பயன்படுத்தும் ஒருவித வாசைன திரவியம் என் மகளின் பதின் வயதை ஞாபகத்திற்கு கொண்டு வரும்.

கொரிந்தியர் கிறிஸ்துவுக்கு…

அதிசயிக்கத்தக்க அன்பு

பழைய ஏற்பாட்டில் நடந்த இறுதிக்கட்ட வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்ச்சியாகிய இஸ்ரவேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி மறுபடியுமாக எருசலேமில் வந்து குடியேறிய நிகழ்ச்சியை எஸ்றா, நெகேமியா புத்தகங்களில் வாசிக்கிறோம். தாவீதின் நகரம் மீண்டும் எபிரேயக் குடும்பங்களால் ஜனத்தொகை பெருகியது, தேவாலயம் கட்டப்பட்டது, சுவர்கள் பழுதுபார்க்கப்பட்டு கட்டப்பட்டது.

பின் மல்கியா தீர்க்கதரிசி மூலம் சில காரியங்களைத் தெரிந்து கொள்கிறோம். நெகேமியாவுடன் ஒரேகாலத்தில் வாழ்ந்த மல்கியா பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பகுதிகளை மக்களுக்கு கொண்டுவருகிறார். அதில் முதலாவதாக இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியது என்னவென்றால் “நான் உங்களை சிநேகித்தேன்…

தொடுவானத்தில் புயல்

அலாஸ்காவில் உள்ள கோடியாக்கில் எங்கள் மகன் ஜோஷ், சால்மன் மீன்களைப் பிடிக்கும் தொழில் செய்யும் ஓர் மீனவ வணிகர்; சில காலத்திற்கு முன்பு எங்கள் மகன் எனக்கு ஓர் புகைப்படத்தை அனுப்பியிருந்தான். அதில் அவன் படகிற்கு சில நூறு அடிகளுக்கு முன்னால் ஓர் சிறிய படகு ஓர் குறுகிய கணவாயின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தொடுவானத்தில் கேடுகளை விளைவிக்கக் கூடிய புயல் மேகங்கள் சூழ்ந்து கொண்டது. ஆனால், தேவனுடைய தெய்வீகத் தன்மையையும், கரிசனையையும் வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக கணவாயின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக அந்த…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.